முஸ்லிம் பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஒபாமா
சிகாகோ: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா, வாக்காளர்களை அவமானப்படுத்திய தன் கட்சினரின் செலுக்காக மன்னிப்புக் கேட்டார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக டெட்ராய்ட் நகரில் நேற்று பிரசார பேரணி நடந்தது.
இதில் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய மேடைக்கு பின்னால் நிற்க முயன்ற 2 முஸ்லிம் பெண்களை அவரது தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் தடுத்து விட்டனர்.
ஷிமா அப்தெல் இபாதீல் மற்றும் ஹெப்பா அரேப் என்ற 2 பெண்களும் முகத்தை மறைக்கும் பர்தா போன்ற துணியை தலையில் கட்டி இருந்ததால் அவர்களை மேடைக்கு பின்னால் நிற்கவிடாமல் தடுத்து விட்டனர் பிரச்சாரக் குழுவினர்.
இது பற்றி அறிந்ததும் பதறிப்போன ஒபாமா அவர்கள் இருந்த இடத்துக்கே போய் தன் கட்சியினரின் செயலுக்காக மன்னிப்புக் கேட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இந்தத் தவறைச் செய்தவர்கள் தன்னார்வ தொண்டர்கள்தான். என் கட்சி பிரமுகர்கள்கூட இல்லை. ஆனாலும் அவர்கள் நடந்து கொண்ட விதம் தவறானது. இது என் கட்சி கொள்கையை பிரதிபலிக்கிற மாதிரி இல்லை. இது போல பாரபட்சம் காட்டப்படுவதற்கு நான் என்றும் எதிரானவன். நடந்த தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த அறிக்கையால் திருப்தியடையாத அமெரிக்க இஸ்லாமிய உறவுக் கழகம், பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஒபாமா நேரடியாகப் போய் மன்னிப்பு கேட்டது மட்டும் போதாது. பகிரங்க மேடையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் அமைப்புகளிலேயே மிக வலுவானது இந்த அமெரிக்க இஸ்லாமிய உறவுக் கழகம் ஆகும்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications