தர்மபுரி அருகே விஷச் சாராயத்திற்கு 3 பேர் பலி

கடந்த மாதம் கர்நாடக, தமிழக எல்லை கிராமங்களில் கள்ளச்சாராயத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பரபரப்பு நீங்குவதற்குள், தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் கள்ளச்சாராயத்திற்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் திப்பிரெட்டிஹள்ளி அருகே உள்ளது குக்கல். இது ஒரு மலை கிராமமாகும். இக்கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் நேற்று காலை கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தியுள்ளனர்.
இதில் சிலருக்கு வாந்தி, பேதி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் பொம்மிடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் வேலு, செல்வம், கோபால் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு வருமாறு போலீஸார் ஒலிபெருக்கி மூலம் கிராமம் கிராமமாக அறிவித்தனர். மேலும் சாராயம் குடித்து விட்டு வேலைக்குச் சென்ற யாரேனும் இறந்துள்ளனரா என்பதை அறியவும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கள்ளச்சாராய சாவால் குக்கல் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications