தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயார்-பாஜக
கோவை: தமிழக அரசியல் நிலமையை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம். பாஜக தலைமையை ஏற்கும் எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்த்து கொள்வோம் என பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மீண்டும் கூறியுள்ளார்.
கோவை வந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்ளிடம் பேசுகையில், நாடாளுமன்றத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நொண்டி வாத்து போல் செயல்படுகிறது.
விவசாயத்தை பாதுகாப்பது, அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது, பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது என அனைத்து துறைகளிலும் அரசு தோல்வியை தழுவியுள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு மாநில அரசுகளை நிர்பந்திக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருவதே இதற்கு காரணம்.
மத்திய அரசு இனி மேலும் பதவியில் நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை.
தமிழக அரசியல் நிலமையை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம். பாஜக தலைமையை ஏற்கும் எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்த்து கொள்வோம் என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications