கருணாநிதியுடன் காரத், டி.ராஜா இன்று சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அணு சக்தி ஒப்பந்த இழுபறி தொடர்பாக முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் இன்று மாலை சந்திக்கின்றனர்.

அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அணு சக்தி ஒப்பந்தத்ைத அமல்படுத்த முயன்றால், ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என இடதுசாரிகள் மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட்டு இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முயன்று வருகிறார். இதுதொடர்பாக டெல்லிக்கும் அவர்செல்லவுள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை பிரகாஷ் காரத்தும், டி.ராஜாவும் கருணாநிதியை சந்திக்கவுள்ளனர்.

இதுகுறித்து இன்று சென்னை வந்த டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. எங்களது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை.

இந்த பிரச்சனை தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தப் போகிறோம். சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்தும் உடனிருப்பார்.

எங்களது எதிர்ப்பையும் மீறி அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்த மத்திய அரசு முயற்சி செய்தால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் தயங்க மாட்டோம்.

விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது என்றார் ராஜா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+