செவ்வாய் கிரகத்தில் ஐஸ்!
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்பதை விரிவாக ஆராய அமெரிக்காவின் நாசா, பீனிக்ஸ் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது.
பீனிக்ஸ் விண்கலம் அங்கு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது. மே 25ம் தேதி பீனிக்ஸ் தரையிறங்கியபோது அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் தென்பட்டது. அது உப்பு அல்லது ஐஸ் கட்டியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையடுத்து மேலும் 3 இடங்களில் பீனிக்ஸ் விண்கலம், மண்ணைத் தோண்டியபோது அங்கும் வெள்ளை நிறத்திலான பொருள் தென்பட்டது.
தோண்டிய சிறிது நேரத்தில் இது சூரிய வெப்பத்தில் ஆவியாகி விட்டது. எனவே இது உப்போ அல்லது பாறையோ இல்லை, மாறாக ஐஸ் கட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் ஐஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் இருக்கிறது என்பதற்கான மிக முக்கிய ஆதாரம் இதுஎன்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இதை வைத்துமட்டும் செவ்வாய் கிரகம், மனிதர்கள் வாழத் தகுதியான கிரகம் என்று கூறி விட முடியாது. உணவுப் பொருள் இல்லாத கிரகம், வாழத் தகுதியற்ற கிரகம் என்பது நாசா விஞ்ஞானிகளின் கருத்து.
தொடர்ந்து ஆய்வு நடத்தி, செவ்வாய் கிரகத்தில் வேறு ஏதாவது கனிப் பொருட்கள் மறைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்யவுள்ளனர்.
செவ்வாயில் ஐஸ் இருப்பது தெரியவந்திருப்பதால், செவ்வாய் கிரக ஆய்வுகள் ஆர்வத்தை தூண்டியுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்













Click it and Unblock the Notifications