காரத்துடன் 3வது அணி தலைவர்கள் சந்திப்பு!!

அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் கிளைமேக்ஸ் நெருங்கி விட்டது. நாளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் மத்திய அரசு தனது இறுதி முடிவை தெரிவிக்க வேண்டும் என இடதுசாரிகள் கெடு விதித்துள்ளனர்.
தங்களது கோரிக்கைக்கு மாறாக மத்திய அரசு முடிவெடுத்தால் ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று இடதுசாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆட்சியைக் காப்பாற்ற உள்ள வழிகள் குறித்து காங்கிரஸ் தீவிரமாக முயன்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் இன்று முக்கிய நிகழ்வாக, 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துடன் திடீர் ஆலோசனையை தொடங்கியுள்ளனர்.
முதலில் தெலுங்குதேசம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராம் மோகன் ராவ், காரத்தை சந்தித்துப் பேசினார். அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்தது.
இதையடுத்து சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங்யாதவும் காரத்தை சந்திக்கவுள்ளார்.
3வது அணி தலைவர்கள், காரத்தை சந்தித்து ஆலோசனை நடத்துவது தேசிய அளவில் புதிய பரபரப்பை கூட்டியுள்ளது. நாளைய கூட்டத்தில் தங்களது கோரிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிராகரித்து விட்டால், 3வது அணியுடன் இணைந்து இடதுசாரிகள் செயல்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த மூன்றாவது அணியில் அதிமுகவும் சில நாட்கள் இருந்தது. பின்னர் திடீரென அதிலிருந்து கழன்று கொண்டு அந்த அணியின் தலைவர்களுக்கு ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் தந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications