Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணு ஒப்பந்தம்: யாரும் எங்களது ஆதரவை கோரவில்லை- அமர்சிங்

Subscribe to Oneindia Tamil

மும்பை: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான எங்களது நிலையை திடீரென மாற்றிக்கொள்ள முடியாது. இதுதொடர்பாக ஆதரவு கேட்டு காங்கிரஸ் தரப்பிலோ, ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பிலோ யாரும் எங்களை சந்திக்கவில்லை என்று 3வது அணியின் முக்கிய கட்சியான சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து என்டிடிவிக்கு அமர்சிங் அளித்துள்ள பேட்டியில்,

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஒருவர் கூட என்னை சந்திக்கவில்லை. நாங்கள், இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது வியப்பைத் தருகிறது. எப்படி இப்படி ஒரு செய்தி வெளியானது என்று எனக்குப் புரியவில்லை.

என்னைப் பொருத்தவரை நான் வெளிப்படையாக பேசக் கூடியவன். எதையும் மறைக்கும் பழக்கம் என்னிடம் இல்லை. என்னை யாராவது சந்தித்திருந்தால் அதை ஏன் நான் மறைக்கப் போகிறேன்?

சந்திக்காதது அவமானம் இல்லை:

அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக எங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் எங்களை சந்திக்க வேண்டும் என நாங்கள் நினைக்க முடியாது. அதை அவமானமாகவும் கருதவில்லை. இது அவர்களது உட்கட்சி விவகாரம். அவர்கள் எதற்கு எங்களை சந்திக்க வேண்டும். தேவைப்படவில்லை என்று அவர்கள் நினைக்கும்போது சந்திக்கவில்லையே என்று நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். இதில் எல்லாம் ஈகோ பார்க்க முடியாது.

இடதுசாரிகள் தங்களது ஆதரவை இன்னும் விலக்கிக் கொள்ளவில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசுதனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யும் என பிரகாஷ்காரத் கூறியுள்ளார். எனவே அவர்களுக்கு எந்த அவசரமும் இல்லை.

நான் சோனியா காந்தி வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு இடதுசாரிகள் எடுத்த முயற்சிதான் காரணம். அதில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை. அதன் பிறகு இடதுசாரிகள் எங்களை மறந்து விட்டார்கள். தொடர்ந்து அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் உள்ளனர்.

ஐ.மு.கூ. அரசுக்கு ஆதரவா?:

நாங்கள் தற்போது ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி. எனவே எந்த முடிவாக இருந்தாலும் தனித்து நாங்கள் எடுக்க முடியாது. கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கலந்து பேசித்தான் எதையும் முடிவு செய்ய வேண்டும்.

நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நாடு திரும்பியதும் அனைத்து கூட்டணித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளேன். அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதம் நடத்தவுள்ளேன்.

அணு சக்தி ஒப்பந்தத்தைப் பொருத்தவரை, எங்களது நிலையை ஏற்கனவே தெளிவாக சொல்லியுள்ளேன். நாடாளுமன்றத்திலும் சொல்லியுள்ளோம், வெளியிலும் தெளிவுபடுத்தியுள்ளோம். திடீரென எங்களது நிலையை நாங்கள் மாற்றிக் கொள்ள முடியாது.

மறு பரிசீலனை உண்டா?:

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சமாஜ்வாடிக் கட்சியுடன் மத்திய அரசு கலந்து பேசவில்லை. இதை நான் பிரதமரிடமே சொல்லியுள்ளேன்.

இந்த விவகாரத்தைப் பொருத்தவரை லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், பிரகாஷ் காரத் ஆகியோர் அரசின் ஒரு அங்கமாக உள்ளனர். அவர்களுக்கிடையே நல்ல உறவும், தொடர்பும் உள்ளது. இன்னும் எதுவும் விட்டுப் போய் விடவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு தற்போது செயலிழந்து இருக்கலாம். ஆனால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அவர்கள் வழியில் இல்லை. எங்களிடம் யாரேனும் வரும் வரையில் நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது.

எங்களது நிலை சரியானது என்ற கருத்துடன் யாரேனும் வரும் வரை, எங்களது கருத்துக்கு ஒத்தவர்கள் வரும் வரை எங்களது நிலையிலும், கருத்திலும் எந்தவித மாற்றமும் இருக்க முடியாது.

இடதுசாரிகளுடன் தொடர்பு..:

பிரகாஷ் காரத்துடன் நான் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். இருமுறை பேசியுள்ளோம். இதை மறைக்க விரும்பவில்லை. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

மகளில் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில்தான் நாங்கள் கருத்தில் வேறுபட்டோம். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. மசோதா மீது எங்களுக்கு பிரச்சினை இல்லை. மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்துத்தான் கருத்து வேறுபாடு.

பெண்களை நாங்கள் மதிக்கிறோம், ஆதரவு தருகிறோம். பிருந்தா காரத் எந்தளவுக்கு பெண்ளுக்கு ஆதரவாக இருக்கிறாரோ அதற்கு நானோ அல்லது முலாயம் சிங் யாதவோ குறைந்தவர்கள் அல்லர்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால்...:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் என்ற கேள்விக்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது.நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

நான் ஊர்திரும்பியதும், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களுடன் பேச வேண்டும். எனதுகட்சி எம்.பிக்களுடன் பேச வேண்டும். இடதுசாரி தலைவர்களுடன் பேச வேண்டும். அதன் பிறகுதான் எனது கருத்தை, எனதுகட்சியின் கருத்தை என்னால்தெரிவிக்க முடியும்.

இடைத்தேர்தல் வருமா?:

நான் அப்படி நினைக்கவில்லை. வரலாம், வராமலும் போகலாம். காரணம், இதுகுறித்து பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இடதுசாரிகளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்தான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள்தான் அதைசெய்ய முடியும். அவர்கள்தான் ஆளுங்கட்சி என்றார் அமர்சிங்.

இந்த நிலையில்,சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கூறுகையில்,

அணுசக்தி ஒப்பந்த பிரச்சினை குறித்து விவாதிக்க ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டம் விரைவில் கூட்டப்படும். இதுதொடர்பாக அக்கூட்டணி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறேன்.

தற்போது சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவருக்கும், மற்ற தலைவர்களுக்கும் வசதியான தேதியை விரைவில் தீர்மானிப்போம்.

நான் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று இடதுசாரிகள் கூறுகிறார்கள். நான் மற்றவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்வது இல்லை. எனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வேன். இடதுசாரிகளுடன் கடந்த காலத்திலும் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது இல்லை. இனிமேலும் கருத்து வேறுபாடு வராது என்றார் அவர்.

சிபிஎம் எச்சரிக்கை:

இந் நிலையில் காங்கிரஸுக்கு முலாயம் சிங் யாதவ் ஆதரவு தரக் கூடாது என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர் எம்.கே.பாந்தே கூறுகையில்,

அணுசக்தி ஒப்பந்தத்தை சமாஜ்வாடி கட்சி ஆதரிக்க போவதாக கூறப்படுவது, உண்மையிலேயே சீரியசானது. முலாயம்சிங், ஒப்பந்தத்தை எதிர்த்து வந்துள்ளார். திடீரென ஆதரிக்க முடிவு செய்தால், முடிவை மாற்றியது ஏன் என்பதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும்.

மேலும், அவரது ஓட்டு வங்கியான முஸ்லிம்கள், இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள். ஆகவே, ஒப்பந்தத்தை ஆதரித்தால், அவர் முஸ்லிம் ஓட்டுகளை இழப்பார். எனவே, அவர் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+