கேபிளில் 'யாரடி நீ மோகினி': ஆபரேட்டர் கைது - சரத் கட்சி பிரமுகருக்கு வலை வீச்சு
புளியங்குடி: புளியங்குடியில் திருட்டுத்தனமாக கேபிள் டிவியில் யாரடி நீ மோகினி படத்தை ஒளிபரப்பிய கேபிள் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சரத் குமார் கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
புளியங்குடி சிந்தாமணி பகுதியில் கேபிள் டிவியில் அனுமதி இல்லாமல் நடிகர் தனுஷ்-நயன்தாரா நடித்த புதிய படமான யாரடி நீ மோகினி ஒளிபரப்பப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி அசோக் குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், ராமலெட்சுமி மற்றும் போலீசார் சிந்தாமணியில் உள்ள தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர் அறையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு யாரடி நீ மோகினி புதிய படத்தின் சிடிக்கள் இருந்தன. இதையடுத்து அங்கிருந்த சிடி, மற்றும் சிடி பிளேயர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி வழக்கு பதிந்து சிந்தாமணியை சேர்ந்த ஆபரேட்டர் குறிஞ்சிமுருகன் என்பவரை கைது செய்தனர். மேலும் கேபிள் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் என்பவரை தேடி வருகின்றனர்.
இவர் நடிகர் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி புளியங்குடி நகர செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications