Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு குழப்பமும் இல்லை-ராமதாசுக்கு பொன்முடி பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் தான் நிரப்பப்படும். இது தொடர்பான ஒப்பந்தம் 26ம் தேதி கையெழுத்தாகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.

அவரது அறிக்கையில்,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 65 சதவீத இடங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். அதற்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை.

தோழமை கட்சி பிரதிநிதிகளோடும் (பாமக உட்பட), சுயநிதிக் கல்லூரி சங்கங்களுடனும் அரசின் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின்னர் தான் நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு அறிக்கை வெளிவந்தது.

அதற்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தவுடன் சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாக அமைப்பு தலைவர் ஜேப்பியார் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி தங்களுக்கே 100 சதவிகிதத்தையும் நிரப்பிக் கொள்ள அதிகாரம் உள்ளது என்றும், கட்டண உயர்வு போதாதென்றும், அரசு நியமிக்கும் இடங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்றும் அறிக்கை விடுத்ததை டாக்டர் ராமதாஸ் பத்திரிகைகளில் படித்திருப்பார் என்று நம்புகிறேன்.

இதைப் படித்த முதல்வர் கருணாநிதி குழு நிர்ணயித்த கட்டணத்திற்கும், அரசு ஒதுக்கீட்டிற்கும் 65 சதவிகிதம் என்பதை சுயநிதிக் கல்லூரிகள் ஏற்றுக் கொண்டு மாணவர்களின் ஒட்டுமொத்த நலனுக்காக ஒத்துழைக்க வேண்டுமென்று ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து தான் உயர் கல்விச் செயலாளர் அந்தச் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான முடிவை எட்டியுள்ளார்.

பாலசுப்பிரமணியம் குழு கட்டணத்தை மட்டுமே நிர்ணயிக்க முடியும். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்கள் குறித்து உயர் கல்வித் துறை செயலாளரால் சங்கங்களுடன் பேசப்பட்டு அரசிற்கு 65 சதவீதம் என்றும், நிர்வாகத்திற்கு 35 சதவீதம் என்றும், சிறுபான்மைக் கல்லூரிகளில் 50-50 சதவீதத்தில் இடங்களை பகிர்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எனது முன்னிலையில் வரும் 26ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஆகவே இதில் எந்தக் குழப்பமும் இல்லை. 65 சதவிகிதம் அரசு ஒதுக்கீடு என்பதை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

எனவே டாக்டர் ராமதாசின் ஐயப்பாடு தேவையே இல்லாதது. மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு குறிப்பிட்டபடி முறையாக நடக்கும்.

மேலும் அரசு ஒதுக்கீட்டிற்கான ரூ. 32,500த்தை சேரும் போதே அண்ணா பல்கலைக்கழகத்திலேயே வங்கிகளிலேயே கட்டுவதற்கான ஏற்பாடு எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ளது என்பதையும், அதனை மாணவர்களும், பெற்றோரும் பெரிதும் வரவேற்றுள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+