நியூயார்க்கின் சிறந்த டாக்டர்கள் பட்டியலில் 20 இந்தியர்கள்
நியூயார்க்: நியூயார்க் நகரின் சிறந்த டாக்டர்கள் பட்டியலில் 20 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நியூயார்க் வீக்லி பத்திரிக்கை இதுதொடர்பான கருத்துக்கணிப்பை நடத்தி பட்டியலை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1434 டாக்டர்கள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலுக்கு 'டாப் டாக்டர்கள்: நியூயார்க் மெட்ரோ ஏரியா' என பெயரிடப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் செயல்பட்டு வரும் சிறந்த டாக்டர்களில் பத்து சதவீதம் பேர் நகர்ப்புறத்திலும், அருகாமைப் பகுதிகளிலும் தொழில் புரிந்து வருகின்றனர்.
இந்தப் பட்டியலில் 20 இந்திய டாக்டர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் முதன்மையானவர் டாக்டர் சித்தரஞ்சன் ரனவத். இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டு அறுவைச் சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்திசாலித்தனம், நோயாளிகளிடம் பழகும் விதம், நோயாளிகளிடம் உள்ள செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சிறந்த டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பிற இந்திய டாக்டர்கள் விவரம்:
மல்லிகார்ஜூன ரெட்டி (குடும்ப மருத்துவம்), ஹேமந்த் கேசர்வாலா (அலர்ஜி, தொற்றுநோய்), வினோத் போபய்யா (அறுவைச்சிகிச்சை), ரவீந்திர அமீன் (மன நலம்), முகுந்த் படேல் (கை அறுவைச்சிகிச்சை), மது குடவள்ளி (நியோநேட்டல்-பெரிநேட்டல் மருத்துவம்), அசோக் ஆனந்த் (நரம்பியல் அறுவைச் சிகிச்சை), ராஜ் முரளி (நரம்பியல் அறுவைச் சிகிச்சை),
சந்திரநாத்சென் (நரம்பியல் அறுவைச் சிகிச்சை), லக்ஷ்மி பக்ஷி (மகப்பேறு), ஹர்வீந்தர் சந்து (மூட்டு அறுவைச் சிகிச்சை), சுபாஷ் ஜெயின் (வலி மருத்துவம்), சோமசுந்தரம் ஜெயபோஸ் (குழந்தைகள், புற்றுநோய், குருதியியல்), அனுப் சிங் (குழந்தைகள் நரம்பியல்), சரளா இனாம்தார் (குழந்தைகள் நலம்), ராஜீந்தர் காந்தி (குழந்தைகள் அறுவைச் சிகிச்சை),
விஜய் வேத் (உடலியல்), தன்மய் முகர்ஜி (என்டோகிரைனாலஜி), ஜதீன் ஷா (அறுவைச் சிகிச்சை), வளவனூர் சுப்ரமணியன் (தொராசிக் அறுவைச் சிகிச்சை), சமீர் தனேஜா (சிறுநீரகவியல்), அசுதோஷ் திவாரி (சிறுநீரகவியல்).
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications