கவுன்சிலிங்கிலிருந்து விலகிய 11,000 மாணவர்கள்!
சென்னை: சுய நிதி பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பணம் கொடுத்து சேர்ந்த 11,000 மாணவர்கள், அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளனர்.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்துகிறது. இந்த ஆண்டு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதையடுத்து 1,38,855 மாணவ- மாணவிகள் விண்ணப்பங்கள் பெற்று சென்றனர். இதில் 1,27,899 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
இதில் 1,17,774 பேர் பிளஸ் டூ முடித்த பொது மாணவ, மாணவியர், 4,918 பேர் தொழிற்கல்வி முடித்தவர்கள், 5,207 பேர் வெளி மாநில மாணவர்கள்.
இதில், விண்ணப்பம் பெற்றவர்களில் 10,956 மாணவ- மாணவிகள் என்ஜினீயரிங் சீட்'டுக்கு விண்ணப்பிக்கவில்லை. இதில் பெரும்பாலானவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங்கை அவர்கள் தவிர்த்து விட்டு சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெறச் சென்றுவிட்டதாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டை விட அரசு கல்லூரிகளின் எண்ணிக்கையும் சீட்'களும் கூடிவிட்டன. மேலும் புதிய சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் பல தொடங்கி இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட்' கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 10,000 என்ஜினீயரிங் இடங்கள் காலியாக கிடந்தன. இந்த ஆண்டு அனைத்து இடங்களிலும் பூர்த்தியாகக் கூடிய வாய்ப்புள்ளது.
ரேங்க் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. இதையடுத்து கவுன்சிலிங் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications