'கற்பனையாய் பேசும் ஜெ': ராயல் கேபிள் விஷன்
சென்னை: ராயல் கேபிள் விஷன் நிறுவனம் குறித்து மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் கற்பனையான புகார்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மு.க.அழகிரி தொடங்கியுள்ள நிறுவனம்தான் ராயல் கேபிள் விஷன். இந்த நிறுவனத்தின் பிடியில் சிக்கி மதுரை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்களும், மக்களும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ராயல் கேபிள் விஷன் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தவறுதலாக, உண்மைக்கு புறம்பாக ராயல் கேபிள் விஷன் சேவை குறித்து மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் சில பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்துள்ளார். இது உண்மைக்கு புறம்பான, கற்பனையான குற்றச்சாட்டாகும்.
கடந்த 9-6-2008 அன்று தொடங்கப்பட்ட ராயல் கேபிள்விஷன் என்னும் நிறுவனம் பொது மக்களுக்கும், கேபிள் ஆபரேட்டர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் உயரிய தொழில் நுட்ப சேவையை வழங்கிட வேண்டும் என்னும் நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
எங்களை விரும்பி, அணுகி தாங்களாகவே இணைத்துக் கொண்ட ஹெட் எண்ட்' மற்றும் லிங்க்' ஆபரேட்டர்களுக்குத்தான் எங்களது சேவை தொடருகிறது. சன் கட்டண சேனல்களை பொறுத்தவரை சட்டப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டு இறுதி வெற்றி பெறுவோம்.
இது ஆர்.சி.வி. மற்றும் எஸ்.சி.வி. என்னும் இரு வணிக நிறுவனங்களுக்கிடையே நடக்கும் நிகழ்ச்சியே அன்றி இதில் அரசுக்கோ, அரசு கேபிள் நிறுவனத்திற்கோ யாதொரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications