ஸ்பைஸ் டெலிகாம் நிறுவனத்தை வாங்குகிறது பிர்லாவின் ஐடியா

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்பைஸ் டெலிகாம் நிறுவனத்தின் 40.8 சதவீத பங்குகளை ரூ. 2700 கோடி கொடுத்து ஐடியா செலுல்லார் நிறுவனம் வாங்கவுள்ளது.

ஒரு பங்குக்கு ரூ. 77.30 கொடுத்து, ஸ்பைஸ் பங்குகளை விலைக்கு வாங்குகிறது ஐடியா. இதன் மூலம், ஸ்பைஸ் நிறுவனத்தில் 39.2 சதவீத பங்குகளை வைத்துள்ள மலேசியாவின் டிஎம் இன்டர்நேஷனல் நிறுவனம், தனது பங்குகளை ஒரு பங்குக்கு ரூ. 156.96 என்ற தொகைக்கு, ஐடியாவுக்கு மாற்றவுள்ளது.

மேலும் ஸ்பைஸ் நிறுவனத்தை, தனது நிறுவனத்துடன் இணைக்கவும் ஐடியா திட்டமிட்டுள்ளது. அப்போது, 100 ஸ்பைஸ் பங்குகளை வைத்திருப்போருக்கு 49 ஐடியா செல்லுலாரின் பங்குகள் வழங்கப்படும்.

இந்த இணைப்பின் மூலம் தற்போது ஸ்பைஸ் வசம் உள்ள 40.5 லட்சம் வாடிக்கையாளர்கள்,அப்படியே ஐடியாவுக்குக் கிடைப்பார்கள். மேலும், இதுவரை கால் பதிக்காத பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் ஐடியா தடம் பதிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இதுகுறித்து ஐடியா நிறுவனத்தின் தலைவரான குமார்மங்கலம் பிர்லா கூறுகையில், இந்த வர்த்தகம் மூலம் ஐடியா நிறுவனத்தின் வளர்ச்சி பெருமடங்காக உயரும்.. நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாகவும் ஐடியா உருவெடுக்கும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மும்பை, தமிழ்நாடு, ஒரிசா ஆகிய பிராந்தியங்களுக்கும் நாங்கள் எங்களது சேவையை விரிவுபடுத்த முடியும். மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு தவிர நாட்டின் பிற பகுதிகளில் ஐடியாவின் சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்றார்.

இந்த வர்த்தகம் முழுமை பெற இன்னும் 6 முதல் எட்டு மாதங்கள் ஆகும்.

இதற்கிடையே, ஐடியாவிடம் தனது பங்குகளை விற்கும் ஸ்பைஸ் நிறுவனத்தின் அதிபரான எம் கார்ப் தலைவர் பூபேந்திர குமார் மோடி, இந்தப் பணத்தை பொழுதுபோக்கு துறை மற்றும் செல்போன் சாதனங்களை தயாரிக்கும் துறையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்குத் துறையில், இந்தப் பணத்தை முதலீடு செய்யவுள்ளோம். மேலும் செல்போன் ஹேன்ட்செட் தயாரிப்பிலும் இறங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் மோடி.

ஸ்பைஸை விற்கும் அதே நேரத்தில் மொரீஷியஸைச் ேசர்ந்த எம்.எஸ்.எம் நிறுவனத்தின் 39 சதவீத பங்குகளை வாங்கும் முயற்சியில்இறங்கியுள்ளார் மோடி. இந்த நிறுவனம் வசம் தான் தற்போது சோனி என்டர்டெய்ன்மென்ட் டிவி (சோனி பிக்சர்ஸ்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீல் முடிந்தால், சோனி பிக்சர்ஸ் டிவியின் பெயர், சோனி ஸ்பைஸ் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

மோடி ஏற்கனவே பல்வேறு பிசினஸ்களில் கால் பதித்தவர். அமெரிக்காவின் ஜெராக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மோடி-ஜெராக்ஸ் நிறுவனத்ைத நடத்தி வருகிறார். பேக்ஸ் நிறுவனமான ஓலிவெட்டியுடன் இணைந்து செயல்படுகிறார். அல்காடெல் நிறுவனத்துடனும் கை கோர்த்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்தபடி செயல்பட்டு வரும் மோடி, இந்தியாவில் தனது சாதனைகளுக்காக பெருமைப்படுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் முதன் முதலில் ஜெராக்ஸ், பேக்ஸ், கம்ப்யூட்டர் ஆகியவற்றை அறிமுகம் செய்தது நாங்கள்தான். இதற்காக பெருமைப்படுகிறோம். தற்போது பொழுதுபோக்கு, கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்டதுறைகளிலும் கால் பதிக்க ஆர்வமாக உள்ளோம்.

இதுதவிர சூரிய சக்தி பிரிவிலும் தடம் பதிக்க யோசித்து வருகிறோம். உலகத்ைத மாற்றும் வல்லமை படைத்த தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் ஆர்வமாக உள்ளோம் என்றார் மோடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+