'கிரீமி லேயர்': வருமான உச்சவரம்பு பரிந்துரை அறிக்கை தாக்கல் ஒத்திவைப்பு!
டெல்லி: கிரீமி லேயர் பிரிவுக்கான வருமான உச்சவரம்பை உயர்த்தும் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்வது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில், கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்த பிரிவினரை சேர்க்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதையடுத்து தற்போது கிரீமி லேயர் பிரிவினரின் வருமான உச்சவரம்பாக ரூ. 2.5 லட்சம் என்று இருப்பதை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து தேசிய பிற்பட்டோர் ஆணையத்தை இதுதொடர்பாக பரிந்துரைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, மாநில பிற்பட்டோர் ஆணையங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்ைத அறிந்து பரிந்துரை அறிக்கையை உருவாக்கியுள்ளது.
அதன்படி ரூ. 4 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆண்டு வருமான உச்சவரம்பை உயர்த்தலாம் என தேசிய பிற்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இன்று மத்திய சமூக நீதித்துறைக்கான அமைச்சர் மீரா குமாரிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அமைச்சர் மீரா குமார் பிசியாக இருப்பதாக ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டதால் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட மாட்டாது என ஆணையம் தெரிவித்துள்ளது.
அதற்குப் பதில் ஜூலை 1ம் தேதி அறிக்கை அமைச்சரிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications