அரசு ஒதுக்கீட்டுக்கு 65,000 சீட்கள்: சுய நிதி பொறியியல் கல்லூரிகள்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ஜேப்பியார் கூறுகையில், ஜூன்26ம் தேதியன்று எங்களது அமைப்பும், அரசும் சேர்ந்து என்ஜீனியர் மாணவர் சேர்க்கைக்கு 65:35 என்ற இட ஒதுக்கீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக அறிந்தோம். ஆனால் எங்களுக்கு இதுவரை அப்படி ஒரு தகவல் வரவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட முடியாதநிலையில் இருக்கிறோம். காரணம், இட ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுைவயில் உள்ளது. அப்படியிருக்கும் போது கையெழுத்திடுவது சரியாக இருக்காது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ரேங்க் பட்டியலை வெளியிட்டு விட்டது. கவுன்சிலிங்குக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். சுய நிதி கல்லூரிகளின் உரிமையாளர்கள் பொதுமக்கள் நலனை விரும்புபவர்கள்.
எனவேதான் மாணவர்கள் நலன்கருதியும், முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்றும் உச்சநீதிமன்ற முடிவு தெரியும் வரை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 65 சதவீத இடங்களைத் தர சம்மதிக்கிறோம். இருப்பினும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம்.
அரசுக்கு இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் கட்டும் கட்டணம் ரூ.. 32 ஆயிரத்து 500ஐ வங்கியில் கட்டி ரசீதை கல்லூரியில் கொடுக்க வேண்டும் என மாணவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மாணவர்களுக்கு பாதிப்பை தரும்.
மொத்தத் தொகையை ஏழை மாணவர்களால் ஒரே தவணையில் செலுத்த முடியாது. உறவினர்களிடத்தில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பணத்தைக்கட்டுவார்கள். எனவே வங்கியில் கட்ட வேண்டும் என்றால் பல மாணவர்கள் இடம் கிடைத்தும் கல்லூரிகளில் சேர மாட்டார்கள். எனவே இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்றார் ஜேப்பியார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications