தேர்தலுக்கு ஆயத்தம்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

இடதுசாரிகளின் நிலையில் விரைவில் மத்திய அரசு கவிழும், லோக்சபாவுக்கு இடைத்தேர்தல் தேர்தல் வரும் என பாஜக கூறி வருகிறது. எனவே கட்சியினர் தேர்தலுக்குத் தயாராகுமாறும் அது கூறியுள்ளது.
இதன் முன்னோட்டமாக 6 பேரின் பெயர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று அதிரடியாக அறிவித்தது. இதில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி, குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தேர்தல் பிரசாரத்தையும் அத்வானி உ.பி. மாநிலம் கான்பூரிலிருந்து தொடங்குகிறார். இந்த பிரசாரப் பயணத்திற்கு விஜய் சங்கல்ப் பிரசாரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக இறுதி செய்து விட்டது.த இருப்பினும் அத்வானி உள்ளிட்ட 6 பேரின் பெயர்களை மட்டும் வெளியிட கடைசி நிமிடத்தில் முடிவெடுக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் குறித்து நேற்று அத்வானி தலைமையில் இரண்டரை மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
அத்வானி தவிர்த்த பிற வேட்பாளர்கள் விவரம்: நவ்ஜோத் சிங் சித்து (அமிர்தசரஸ்), வினோத் கண்ணா (குர்தாஸ்பூர்), ஸ்ரீபத் நாயக் (வடக்கு கோவா), ஜி.பி.எஸ். ராவத் (பெளரிகார்வால்), அனுராக் தாக்கூர் (ஹமீர்பூர்)
தனது தேர்தல் பிரசாரத்தை அத்வானி உ.பி.. மாநிலத்திலிருந்து துவக்குவதன் மூலம் அம்மாநிலத்திற்கு பாஜக குறி வைத்திருப்பது தெரிய வருகிறது. இங்கு மட்டும் 80 லோக்சபா சீட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உ.பியில் அதிக அளவிலான சீட்களை வெல்ல பாஜக திட்டமிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள பல மூத்த தலைவர்களை லோக்சபா தேர்தலில் நிறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாத இறுதியில் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் இறுதி செய்யப்படும் என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூட்டத்திற்குப் பின்னர் நாயுடு கூறுகையில், வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம் பிரசாரத்திற்கு போதிய அவகாசம் கிடைக்கும். திட்டமிட்டு பிரசாரம் செய்ய முடியும். பூர்வாங்கப் பணிகளை முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய முடியும். இதன் மூலம் பிற கட்சி வேட்பாளர்களுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்க முடியும். எனவேதான் முன் கூட்டியே வேட்பாளர்கள் பெயர்களை அறிவிக்கிறோம் என்றார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications