சென்னை விமானத்தில் கோளாறு - 124 பயணிகள் தப்பினர்
சென்னை: 124 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நேற்று சிங்கப்பூருக்கு 124 பயணிகள், 5 ஊழியர்களுடன் ஐசி 557 என்கிற இந்தியன் விமானம் புறப்பட்டது. விமானம் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் என்ஜின் ஒன்றில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விமானம் சென்னைக்குத் திருப்பப்பட்டது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டிருந்தன. பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
பின்னர் என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மாலையில் விமானம் மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டது. அப்போது 3 பயணிகள் தாங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்து இறங்கிச் சென்று விட்டனர். இதையடுத்து 121 பயணிகளுடன் விமானம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications