பதவி விலகுவேன், ஆனால்.. முஷாரப் நிபந்தனை
இஸ்லாமாபாத்: தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அரசு உறுதியளித்தால் அதிபர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
முஷாரப் மீது ராணுவ ஆட்சி அடக்குமுறை, முன்னாள் பிரதமரை சிறையில் அடைத்தது, நீதிபதிகளை கைது செய்தது, எமர்ஜென்சியை கொண்டு வந்தது, ஆட்சியைக் கவிழ்த்தது உள்பட 10 குற்றச்சாட்டுகளை நவாஸ் ஷெரீப்பின் கட்சி கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையி்ல் முஷாரப் மீது நாடாளுமன்றத்தி்ல் கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸ் கோரி வருகிறார்.
ஆனால், இதைச் செய்ய ஆட்சியில் உள்ள சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி மறுத்தது. இதனால் ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என சர்தாரியை நவாஸ் மிரட்டி வருகிறார்.
இதனால் கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முஷாரப் கைது செய்யப்படும் நிலை கூட உள்ளது. அதிலிருந்து தப்பும் வகையில், தானே பதவி விலகி விடுவதாகவும், ஆனால், அதற்கு தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதி அளிக்க வேண்டும் என்றும் முஷாரப் தரப்பு கோர ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தானின் முன்னணி நாளதழான த நேசன் செய்தி வெளியிட்டுள்ளது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications