ஜூலை 2ம் தேதி முதல் லாரிகள் ஓடாது: சம்மேளனம் அறிவிப்பு
நாமக்கல்: டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஜூலை 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும், பழைய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத் தடைகளை அமைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 2ம்தேதி முதல் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இப்போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல்லில் சம்மேளனத் தலைவர் செங்கோடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆவண செய்வதாக உறுதியளித்தனர். இதனால் அகிலஇந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு மட்டும் போராட்டத்திலிருந்து விலகியுள்ளது. இருப்பினும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடுவதில் உறுதியாக உள்ளது.
எனவே அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்தபடி ஜூலை 2ம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கும். தமிழகத்திலும் இந்தப் போராட்டம் தொடங்குகிறது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நாளை நடைபெறவுள்ளது. போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அப்போது ஆலோசனை செய்யவுள்ளோம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications