அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி - 70 பேர் காயம்
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலம், பாஸ்கா மாவட்டம் தமுல்பூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள வாரச்சந்தையில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
இங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிற்பகல் ஒன்றரை மணியளவில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிளில் குண்டு வெடித்தது. இதையடுத்து அந்த இடமே பெரும் போர்க்களம் போல ஆனது.
பலர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழநதனர். மேலும் 4 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தனர். 12 சிறுவர், சிறுமியர் உள்பட 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்களில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், குவஹாத்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
உடனடியாக விரைந்த போலீஸார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து சீல் வைத்தனர். அப்போது வெடிக்காத நிலையில் இருந்த ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குண்டுவெடிப்புக்கு உல்பா தீவிரவாதிகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications