அணு சக்தி ஒப்பந்தம் திட்டமிட்டபடி நிறைவேறும்: பிரதமர்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நாடு முழுவதும் நல்ல ஆதரவு உள்ளது. இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 15 நாட்களாக பலத்த இழுபறி நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது மெளனத்ைதக் கலைத்தார்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்துள்ள அவர், ஒப்பந்தம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தை நாடத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
உலக தட்பவெப்ப மாற்றம் குறித்த தேசிய திட்ட அறிக்கையை இன்று பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் வெளியிட்டார். பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக என்.எஸ்.ஜி மற்றும் சர்வதேச அணு சக்தி கவுன்சிலிடம் பேச எங்களை அனுமதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதுதான் அரசின் ஒரே விருப்பம், கோரிக்கை.
இதுதொடர்பாக இடதுசாரிகளின் சந்தேகங்களைப் போக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஆட்சி கவிழும் நிலை உருவானால் அதை சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன். அனைத்துத் தரப்பினருக்கும் திருப்தி தரும் வகையிலான தீர்வுக்கு வழி உள்ளதாகவே இன்னும் நான் நினைக்கிறேன்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான நடைமுறைகளை முடிக்க எங்களை அனுமதிக்குமாறு மீண்டும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதன் பின்னர் அதை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதை அனைவரும் உணர வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.
இதற்கிடையே, ஜூலை 7ம் தேதி சர்வதேச அணு சக்தி கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்லவுள்ளதாக திட்டத்தில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications