ஜூலை 15ம் தேதி அரசு கேபிள் தொடக்கம் - கருணாநிதி உத்தரவு
சென்னை: ஜூலை 15ம் தேதி அரசுகேபிள் டிவி தொடங்கப்படுகிறது. அதன் பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் இதை விரிவுபடுத்தத் தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு கேபிள் டிவ நிறுவனத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் கருணாநிதி, நேற்று உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் விரிவான ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர், கோவை, வேலூர் மற்றும் நெல்லையில் டிஜிட்டல் ஹெட் என்ட் கட்டுமான வசதிகள், அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ஜூலை 15 முதல் தஞ்சாவூரில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சப் எம்.எஸ்.ஓக்களுக்கு கேபிள் டிவி இணைப்புகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மூன்று டிஜிட்டல் ஹெட் என்டுகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து நேற்று இரவு சென்னை வந்து அடைந்துள்ளது என்றும், இரு நாட்களில் இவை தஞ்சாவூர், கோவை, வேலூரை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல அரசு கேபிள் டிவி நிறுவனத்திடமிருந்து சேவைகளைப் பெற விரும்பும் லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் சப் எம்.எஸ்.ஓ.க்களுக்கு ஜூன் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இந்த நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.
இந்த விளம்பரத்தின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
இதேபோல தொலைக்காட்சியாளர்களிடம் இந்த நிறுவனம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. தொலைக்காட்சியாளர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தைப் பற்றியும், லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சப் எம்.எஸ்.ஓக்களிடமிருந்து வசூல்செய்யப்பட வேண்டிய கட்டணத்தைப் பற்றியும் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பணிகளை விரைவில் முடித்து தஞ்சாவூரில் சேவைகளை ஜூலை15 முதல், படிப்படியாக கோவை, வேலூர் மற்றும் நெல்லையில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல், சென்னை மாநகரத்தில் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்குவதற்கு ஏற்ற வகையில், பணிகளை விரைவுபடுத்துமாறு முதல்வர் கருணாநிதி அறிவுரைகள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications