முதல்வர் பிறந்த நாள் ஜல்லிக்கட்டு-ஒருவர் பலி, 165 பேர் காயம்
திருச்சி: திருச்சியில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் பலியானார், 165 பேர் படு காயம் அடைந்தனர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் 85 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வளாகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார்.
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தது. அப்போது காளைகளை அடக்க முயன்ற தஞ்சை மாவட்டம், கண்டிதம்பட்டுவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பரிதாபமாக பலியானார். மேலும் 165 பேர் படு காயம் அடைந்தனர்.
காளைகளை அடக்கிவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டது.
இநத விழாவில் வனத்துறை அமைச்சர் செல்வராஜ், திருச்சி சிவா எம்பி, திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications