தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் வெற்றி
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என்.சீனிவாசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா தோல்வி அடைந்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 78வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தற்போதைய தலைவரான சீனிவாசன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. இதில் சீனிவாசன் அதிக வாக்குகளை பெற்று மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடைய அணியில் இடம்பெற்றிருந்தவர்கள் மற்ற பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சீனிவாசனுக்கு 134 வாக்குகளும், ஏ.சி.முத்தையாவுக்கு 55 வாக்குகளும் கிடைத்தன. செயலாளராக காசி விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 142 வாக்குகள் கிடைத்தன.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான சீனிவாசன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தொடர்ந்து 7வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications