'எண்ணை கப்பல் வராததே டீசல் தட்டுப்பாட்டுக்கு காரணம்'

இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான எண்ணை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பிபிசில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல் இயக்குநர் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:
இந்தப் பிரச்சினை தற்காலிகமானதுதான். இதற்கான எண்ணை கப்பலில் இருந்து டீசல் சப்ளையை உரிய நேரத்தில் பிபிசிஎல் நிறுவனத்தால் பெற முடியாமல் போய் விட்டது. இதன் காரணமாகவே தற்காலிக பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தட்டுப்பாட்டால், கையிருப்பில் இருந்த டீசலின் அளவும் குறைந்து விட்டது. எனவே பிபிசிஎல்லின் வாடிக்கையாளர்கள் பலர், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற மற்ற நிறுவனங்களை நாட அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த இரு நிறுவனங்களும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கமான அளவை விட அதிக டீசல் சப்ளை செய்து நிலைமையை சமாளித்து வருகின்றன.
தற்போது நிலவும் டீசல் பற்றாக்குறை இன்னும் 24 மணி நேரத்தில் சரியாகி விடும். விரைவில் பிபிசிஎல் டேங்கர் கப்பல் சென்னை வரவுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் பீதியோ, வருத்தமோ அடைய வேண்டாம்.
விரைவில் டீசல் தாராளமாக கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடைக்காலத்தில் ஏற்பட்ட தட்டுப்பாட்டுக்கு வருந்துகிறோம். பிபிசிஎல் டேங்கர் கப்பல் வந்ததும் நிலைமை சீரடைந்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications