தாராள பெட்ரோல், டீசல் சப்ளை: மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் சப்ளையை அதிகரிக்க வேண்டும், தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில்சில இடங்களில் பெட்ரோல், டீசல்தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்னர்.

பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளதா, வைத்துக் கொண்டே விற்காமல் உள்ளனரா என்பது குறித்து ஆராயப்பட்டது. இருப்பு வைத்துக் கொண்டே விற்காமல் இருந்தவர்களை எச்சரித்து விற்பனையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

எண்ணை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு தற்போது உள்ள இருப்பு, விற்பனை நிலவரம் பற்றியும் தலைமைச்செயலாளரால் ஆய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர்கள் ஆய்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எண்ணை நிறுவனங்கள் தட்டுப்பாடின்றி டீசல், பெட்ரோல் விநியோகம் செய்ய உரிய நடவடிக்ைக எடுக்கவும், அன்றாட இருப்பு நிலவரத்தை அரசுக்குத் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எண்ணை நிறுவனங்கள் பொதுமக்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் எவ்வித தடையுமின்றி விற்பனை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தும்படி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவை முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+