ஈரோடு பெண் எஸ்.ஐ. தாக்குதல் வழக்கில் குழப்பம்-நழுவும் போலீஸ்
கோவை: ஈரோடு டவுன் காவல்நிலையத்தில், பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தாக்கப்பட்டது தொடர்பாக போலீஸ் தரப்பில் குழப்பமான பதில்களே தரப்படுகின்றன. அவர் தாக்கப்பட்டாரா, அப்படியானால் அவரைத் தாக்கியது யார் அல்லது விபத்தில் சிக்கினாரா என்பது குறித்து போலீஸாரிடம் தெளிவான பதில்கள் இல்லை.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (24). மூன்று ஆண்டுகளுக்கு முன் எஸ்.ஐயாகத் தேர்வு செய்யப்பட்டார். முதலில் பழநி அருகே உள்ள ஆயக்குடியில் பணி அமர்த்தப்பட்டவர், இந்த ஆண்டு துவக்கத்தில் ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.
பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் எடுத்த விஜயலட்சுமிக்கு உயர் அதிகாரிகளிடம் கிடைத்தது அதிருப்திதான். காரணம், லஞ்சம் வாங்காததால் இவருக்குக் கிடைத்த நல்ல பெயர். அதேபோல விஜயலட்சுமிக்கு கீழ் பணியாற்றும் போலீஸாரும் அதிருப்தியுடனே இருந்தனர். காரணம், அவர்களை லஞ்சம் வாங்க விடாமல் கட்டிப் போட்டதால்.
இந் நிலையில் தடாலடியாக மொடக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் விஜயலட்சுமி. ஆனால் அங்கும் நேர்மையாக இருந்ததால் விஜயலட்சுமிக்கு எதிர்ப்புகள் குவிந்தன. தவறு செய்த அனைவரையும், யார் என்று பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்தார் விஜயலட்சுமி.
இந் நிலையில்தான் கடந்த மே மாதம் 29ம் தேதி இரவு இரு போலீஸாருடன் பைக்கில் இரவு ரோந்துக்குச் சென்றார் விஜயலட்சுமி. இரவு 11 மணியளவில் விஜயலட்சுமி விபத்தில் சிக்கியதாகவும், அதில் அவர் சுய நினைவிழந்து விட்டதாகவும் உயர் அதிகாரிகளுக்கும், விஜயலட்சுமியின் பெற்றோருக்கும் தகவல் வந்தது.
இதைக் கொடுத்தது ரோந்து சென்ற இரு போலீஸாரும்தான்.
தகவல் அறிந்து பெற்றோர் பதறியடித்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.
என்ன நடந்தது?:
விஜயலட்சுமிக்கு எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து சம்பந்தப்பட்ட இரு போலீஸாரும், தங்களது உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இரவு ரோந்து சென்றபோது பைக்கிலிருந்து விஜயலட்சுமி ஸ்லிப் ஆகி விழுந்து விட்டாராம். இதில், அவரது கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் அடிபட்டுள்ளது. கால் எலும்பும் முறிந்து விட்டதாக இருவரும் கூறியுள்ளனர்.
இதைச் சொல்லித்தான் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார் விஜயலட்சுமி.
கோவை மருத்துவமனைக்கு வந்த பிறகுதான் விஜயலட்சுமி விபத்தில் சிக்கவில்லை. அவரை யாரோ தலையின் பின்புறம் பலமாக
தாக்கியுள்ளனர். அதில்தான் அவரது மூளை பாதிக்கப்பட்டு சுய நினைவை அவர் இழந்துள்ளதாக கோவை மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக விஜயலட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் இதுவரை அவரை எந்த உயர் அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. இதையடுத்து விஜயலட்சுமியின் பெற்றோரும், சகோதரரும் சரக டிஐஜி, மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த உதவியோ அல்லது விசாரணையோ வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஐஜி சீமா அகர்வால் கூறுகையில், சப்இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவக் கோரி அவரது சகோதரர் மனு கொடுத்துள்ளார். அதை பரிசீலித்து வருகிறோம்.
விஜயலட்சுமியை அதிகாரிகள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். யாரும் பார்க்காமல் இல்லை என்றார்.
எஸ்.ஐ. விஜயலட்சுமி விவகாரத்தில் பல உண்மைகள் மறைந்திருப்பதாகவும், உரிய முறையில் விசாரணை நடத்தினால் அவை வெளி வரும் என்று கூறப்படுகிறது.
-
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications