ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: எச்.ராஜா
திருச்சி: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி அருகே உள்ள மணச்சநல்லூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியா வல்லரசு ஆவதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் தான் அணு ஒப்பந்தத்தை நம் மீது திணிக்க விரும்புகின்றது.
மக்களை திசை திருப்ப காங்கிரஸ், இடது சாரிகள் கூட்டு சதி செய்து நாடகம் ஆடுகின்றனர்.
விலைவாசி உயர்வு பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசு தனது செயல்பாட்டை இழந்து விட்டது.
விலைவாசி உயர்வு, மற்றும் பல பிரச்சனைக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தினர் மீது மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன். மக்களை ஏமாற்றும் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் விவசாயிகளின் கடன் ரூ 71 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை. உண்மையில் தள்ளுபடி செய்தது 28 ஆயிரம் கோடி ரூபாய் தான்.
பாராளுமன்றத்திற்கு எப்போது வேண்டும் என்றாலும் தேர்தல் வரலாம். அப்போது யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications