சன் டிவிக்கு எதிராக ராயல் கேபிள் விஷன் ஆபரேட்டர்கள் ஆர்பாட்டம்!
மதுரை: சன் டிவி நிர்வாகத்தை கண்டித்து ராயல் கேபிள் விஷன் நிறுவன கேபிள் ஆபரேட்டர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
மதுரையில், சன் டிவியின் எஸ்.சி.வி. கேபிள் நிறுவனத்திற்கும், மு.க. அழகிரியின் ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திற்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.
ராயல் கேபிள் விஷன் இணைப்புகளில் சன் டிவி குழும சேனல்களை ஒளிபரப்பு செய்யாததால் பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டப்படி, சன் டிவி குழும சேனல்களின் ஒளிபரப்பை பெறுவேன் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் சன் டிவி தரப்பில் சன் குழும சேனல்களை ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திற்கு ஒளிபரப்பும் உரிமை தர விரும்பவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், மதுரையில் ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தின் 400 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மீடியா நெட் நிறுவன நிர்வாகி ஆனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்தின் போது சன் டிவி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்ப பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி மதுரையில் உள்ள சன் டிவி, தினகரன் நாளிதழ் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.












Click it and Unblock the Notifications