விழுப்புரம்-சைக்கோ மனிதர் அடித்துக் கொலை
சென்னை: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே சைக்கோ நபர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட மாவட்டங்கள் சிலவற்றில் சமீபகாலமாக சைக்கோ மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் கூறி வருகின்றனர். இவர்கள் தனியாக இருப்பவர்கள், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருப்பவர்களை தாக்குதாக கூறப்படுகிறது. இந்த சைக்கோ மனிதர்களின் தாக்குதலில் சிலர் இறந்துள்ளனர்.
இதுதொடர்பாக சமீபத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல சைக்கோ என சந்தேகிக்கப்படும் ஒருவரை கிராம மக்கள் எரித்துக் கொன்ற சம்பவம் நடந்தது.
இந்த நிலையில் விழுப்புரம் அருகே சைக்கோ மனிதர் என்ற கூறப்படும் இன்னொருவரை கிராம மக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள கங்காராம்பாளையம் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் இன்று நடந்தது. அந்த நபருக்கு 40 வயதிருக்கும். யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. வினோதமான முறையில் கிராமத்தில் நடமாடியுள்ளார்.
இதையடுத்து அந்த நபரைப் பிடித்து சரமாரியாக கிராம மக்கள் அடித்துள்ளனர். கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். இதில் அந்த நபர் பரிதாபமாக இறந்து போனார்.
போலீஸார் விரைந்து வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications