ரூ. 85 ,344 கோடியில் 11வது ஐந்தாண்டு திட்டம்- 9% பொருளாதார வளர்ச்சிக்கு தமிழகம் இலக்கு
சென்னை: 11வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கு தமிழகம் ரூ. 85 ,344 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தீட்டியுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 9 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்திற்கான ஆண்டுத் திட்டங்களை உருவாக்குதல், ஐந்தாண்டுத் திட்டங்களை வடிவமைத்தல், பகுதி இரண்டின் கீழ்வரும் செயல் திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் அளித்தல், பல்வேறு முகமைகளின் வாயிலாக ஆய்வுகள் மேற்கொண்டு கொள்கை முடிவுகள் எடுக்க அரசுக்கு உதவுதல்,
மாநில நிலப் பயன்பாட்டு வாரியம் வழியாக நிலப் பயன்பாட்டு முறைகளை ஆய்வு செய்தல், மனித மேம்பாட்டு ஆதார மையத்தின் வழியாக மனித மேம்பாடுகள் குறித்த கருத்துகளை அரசுக்கு வழங்குதல் முதலிய பணிகளின் மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் விரைவுபடுத்திடும் நோக்கில்,
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் 1971ம் ஆண்டு மே திங்கள் 25ஆம் நாள் மாநிலத் திட்டக் குழு அமைக்கப்பட்டது.
இது மத்தியத் திட்டக் குழுவின் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்தும், மாநிலத்தின் தேவைகளை முதன்மைப்படுத்தியும் நான்காவது ஐந்தாண்டுத் திட்ட காலத்திலிருந்து திட்டங்களை உருவாக்கி வருகிறது.
2006ம் ஆண்டில் இந்த அரசு அமைந்தபின், முதல்வர் கருணாநிதி தலைமையில் மாநிலத் திட்டக் குழு திருத்தியமைக்கப்பட்டது. இக்குழு தற்போது 2007-2008 முதல் 2011-2012 வரையிலான 11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அறிக்கையினை ஆங்கிலத்திலும், தமிழிலும் தயாரித்துள்ளது.
தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள 11வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையை மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் திட்டக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்க, அதனை மாநில திட்டக்குழுவின் தலைவராகிய முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.
இத்திட்ட காலத்தில் வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் ஆண்டு வளர்ச்சி 4 சதவீதத்தை எட்ட வேண்டும் எனும் இலக்கு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.
10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்திற்கான மொத்த திட்ட அளவு ரூ. 43,400 கோடி ரூபாய். அது 11வது திட்ட காலத்திற்கு இரு மடங்காக ரூ. 85 ,344 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதில், வேளாண்மை மற்றும் பாசனத் துறைக்கான திட்டச் செலவு ரூ. 4,500 கோடி என்பதிலிருந்து ரூ. 11,145 கோடி எனவும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 5,400 கோடி என்பது ரூ. 10,241 கோடி ரூபாய்,
மின்சாரத் துறைக்கு ரூ. 5,800 கோடி என்பது ரூ. 10,743 கோடி அளவுக்கும், தொழில் துறைக்கு ரூ. 2,000 கோடி என்பது ரூ. 3, 716 கோடி,
சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 5,900 கோடி என்பது ரூ. 11,647 கோடி எனவும், சமூகப் பணிகளுக்கு ரூ. 19,000 கோடி என்பது ரூ. 36,733 கோடி என்றும், இதர பணிகளுக்கான திட்டச் செலவு ரூ. 800 கோடி என்பது ரூ.1,121 கோடி என்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்ட ஒதுக்கீடுகள் மூலம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மைக் குறிக்கோளான மாநில பொருளாதாரத்தின் ஆண்டு வளர்ச்சியை 9 சதவீதமாக உயர்த்துவதற்குரிய முயற்சிகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு அதி்ல் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications