பிபிசிஎல் கப்பல் சென்னை வந்தது - டீசல் பற்றாக்குறை நீங்கியது
சென்னை: சென்னை நகருக்கு பிபிசிஎல்லின் எண்ணை கப்பல் நேற்று வந்து சேர்ந்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு டீசல் சப்ளை முழு வீச்சில் தொடங்கியது.
கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் மக்கள் பெரும் அவதிப்பட்டு விட்டனர். பெட்ரோல், டீசல் இல்லாமல் அவர்கள் பட்ட பாடு பெரும் சோகம்.
இதற்கெல்லாம் காரணம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எண்ணை கப்பல் வந்து சேராததே என்று கூறப்பட்டது. இந்தக் கப்பல் நேற்று காலைதான் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி எண்ணை ஏற்றிக் கொண்டு வந்த சம்பூர்ண ஸ்வராஜ்யா என்ற பெயர் கொண்ட அக்கப்பல் நேற்று வந்தது சேர்ந்து. இதையடுத்து கப்பலிலிருந்து டீசலை எண்ணை நிறுவனங்களின் கிட்டங்கிகளுக்கு மாற்றும் வேலை தொடங்கியது.
துறைமுகத்திலிருந்து, தண்டையார்பேட்டையில் உள்ள பிபிசிஎல்லின் ஆயில் டெர்மினலுக்கு குழாய்கள் வழியாக டீசல் அனுப்பப்பட்டது. ஹை ஸ்பீட் மற்றும் சாதாரண வகை டீசல் தற்போது வந்துள்ளது. இவை ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்டு விட்டதால் மறுபடியும் அந்த வேலையைச் செய்ய வேண்டிய நிலை இல்லை.
எனவே பைப் லைன்கள் மூலம் ஆயில்டெர்மினலுக்கு வந்த டீசல் அப்படியே டேங்கர் லாரிகள் நிரப்பப்பட்டு பெட்ரோல் பங்குகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் மூலம் டீசல் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி பிரச்சினை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications