பெட்ரோல்-டீசல்: சென்னையில் மட்டும் தட்டுப்பாடு ஏன்?-ஜெ
சென்னை: தற்போது நிலவும் நிதி நெருக்கடி, விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு, மாநில திமுக அரசுகளால் முடியவில்லையென்றால், ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என பயக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டெல்லி, மும்பை, கல்கத்தா போன்ற பெரு நகரங்கள் உட்பட இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் மட்டும் ஏற்பட காரணம் என்ன என்பது தெரியவில்லை.
மத்திய அரசோ, அணு சக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரிகளை எப்படி சமாளிப்பது, காஷ்மீர் அரசை எப்படிக் காப்பாற்றுவது, புதுச்சேரியில் முதலமைச்சரை மாற்றுவதா வேண்டாமா, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை எப்படிப் பெறுவது, மக்களவைத் தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்த ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது.
விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் கட்டுக் கடங்காத விலை ஏற்றம், ஏறுமுகத்தில் பணவீக்கம் ஆகிய பாதகச் செயல்களுக்கு முக்கிய காரணமான ப. சிதம்பரமோ, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதுரில் அமைக்கப்படவுள்ள கிராமிய பயிற்சி மையம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு,
நாட்டு மக்களுக்கு பாதகம் செய்வோரை ஏற்கக் கூடாது, இந்த இடத்தில் பாரதியாரின் பாதகம் செய்வோரை கண்டால் காறி உமிழ்ந்து விடு பாப்பா' என்ற பாடல் நினைவுக்கு வருவதாக வியாக்யானம் செய்திருக்கிறார்.
ஆனால், பங்கேற்கும் குறிப்புகள் (participatory notes) குறித்து நான் கேட்ட பத்து கேள்விகளுக்கோ, அல்லது காரைக்குடியில் இரவோடு இரவாக ஒரு அலுமினியம் புளோரைடு தொழிற்சாலை உருவானது குறித்த எனது அறிக்கைக்கோ சரியான, முறையான பதில் அளிக்க மத்திய நிதி அமைச்சருக்கு யோக்யதை இல்லை.
கடந்த சில வாரங்களாகவே, மத்திய அரசை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பிலேயே மத்திய, மாநில அரசுகள் உள்ளன.
இதன் விளைவாக, மக்கள் நலப் பணிகள், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், நாட்டில் உணவுப் பஞ்சம், நிதி நெருக்கடி ஆகியவை ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.
ஏனென்றால், இதுபோன்ற விலைவாசி உயர்வை, பெட்ரோல்-டீசல் தட்டுப்பாட்டை, உரத்தட்டுப் பாட்டை, உப்புத் தட்டுப்பாட்டை தமிழக மக்கள் இதுவரை கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.
கடந்த 1ம் தேதி இரவு முதல் அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதாக தெரியவில்லை.
இதன் விளைவாக காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன.
"வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.''
அதாவது, அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகியவற்றை கொண்டதாக விளங்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க மத்திய, மாநில அமைச்சரவைகள் செயல்படுவதாக இல்லை. இதனால்தான், மக்கள் பெருத்த இன்னல்களுக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.
இனிவரும் ஒரு சில மாதங்களிலாவது, வேலை நிறுத்தம், தட்டுப்பாடு ஆகியவை இல்லாமல் தமிழக மக்களை காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
தற்போது நிலவும் நிதி நெருக்கடி, விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய காங்கிரஸ் மற்றும் மாநில திமுக. அரசுகளால் முடியவில்லையென்றால், ஆட்சியை விட்டு வெளியேறுவது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications