தூத்துக்குடி துறைமுகம் ஸ்தம்பித்தது!
தூத்துக்குடி: லாரி ஸ்டிரைக் எதிரொலியால் தூத்துக்குடி துறைமுகம் ஸ்தம்பித்தது. 5 ஆயிரம் லாரிகள் ஓடாததால் சரக்குகள் அனுப்ப முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து உரங்கள், நிலக்கரி, அமிலங்கள், இரும்பு உதிரி பாகங்கள் உள்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தினந்தோறும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 1000-க்கான லாரிகள் வந்து செல்லும். லாரி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் ஆங்கங்கே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து வரும் சரக்குகள் வெளியே எடுத்து செல்ல முடியவில்லை.
உரங்கள் பல பகுதிகளுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கின்றன. துறைமுகம் வெளியே லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதே போல தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாமுவேல் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. லாரி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து அந்தந்த பகுதியில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துறைமுகத்தி்ல் கப்பலில் இருந்து சரக்குகள் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சுமார் 1000க்கும் மேற்பட்ட லாரிகள் செல்லும். நேற்று சரக்குகளை ஏற்றிக் கொண்டு எந்த லாரியும் செல்லவில்லை. அங்குள்ள சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, சிறு உப்பளங்களாக சுமார் 800க்கும் மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. தூத்துக்குடியில் பிரதான தொழில் உப்பு உற்பத்தி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வெளிமாநிலங்களில் தூத்துக்குடி உப்புக்கு தனி மவுசு உண்டு. தினந்தோறும் சுமார் 200 முதல் 300 லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு உப்பு கொண்டு செல்லப்படுகிறது. லாரி ஸ்டிரைக்கை ஓட்டி உப்பளஙகளில் உப்பு ஏற்றப்படவில்லை. அந்த பகுதிகளில் உப்பு அப்படியே தேங்கி உள்ளது. உப்பு ஏற்றும் லாரிகள் ஆங்கங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications