நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்
சென்னை: மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் கிடந்தார்.
இந்த ரயில் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில், அந்த ரயில் பேசின்பிரிட்ஜ் ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காலை 10 மணியளவில் ரயில்வே ஊழியர்கள் பெட்டிகள சுத்தம் செய்ய நுழைந்தபோது 2ம் வகுப்பு ஏ.சி பெட்டியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கிய நிலையில், இருக்கையில் பிணமாக உட்கார்ந்த நிலையில் காணப்பட்டார்.
அவரது முகம் முழுவதுமாக சட்டையால் மூடப்பட்டிருந்தது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், அந்த வாலிபர் ரயிலில் பயணம் செய்த போது தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை.
பேசின்பிரிட்ஜ் பணிமனை, அல்லது சென்ட்ரல்-பேசின்பிரிட்ஜ் இடையே ரயில் நின்றிருந்தபோது தான் அவரை யாரோ தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து சென்டிரல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், இது தற்கொலையாகத் தெரியவில்லை. அவரது கால்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையில் இருந்தனர். இதனால் தற்கொலை இல்லை. யாரோ கொலை செய்து ரயில் பெட்டிக்குள் தொங்க விட்டுள்ளனர் என்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications