தனது அனுபவத்தை எனக்கு தந்த முதல்வர்- குரு
Subscribe to Oneindia Tamil
காடுவெட்டி: அதிமுக ஆட்சியில் தனக்கு கிடைத்த அனுபவத்தை இப்போது எனக்குத் தந்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி என கைது செய்யப்பட்ட வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கூறினார்.
அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டபோது குரு கூறியதாவது:
முன்பு அதிமுக ஆட்சியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார் முதல்வர் கருணாநிதி.
இப்போது அதே அனுவத்தை தன்னிடம் உள்ள போலீசாரை வைத்து எனக்குக் கொடுத்திருக்கிறார்.
இது திட்டமிட்ட பழிவாங்கல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதற்காக நான் கலங்க மாட்டேன், அஞ்சவும் மாட்டேன், என்றார்.












Click it and Unblock the Notifications