குவைத்தில் இந்தியர் தூக்குப் போட்டுத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
துபாய்: குவைத்தில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
துபாயின் ஷுவாய்க் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இவர் தங்கியிருந்தார். புதன்கிழமை காலை அப்பகுதி வழியாக சென்ற ஒருவர், இந்தியத் தொழிலாளர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து போலீஸுக்கு அவர் தகவல் கொடுக்கவே போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட நபர் எந்த ஊரைச் சேர்ந்தவர், பெயர் என்ன என்ற விவரத்ைத போலீஸார் தெரிவிக்கவில்லை. அவர் சில நாட்களாகவே மன உளைச்சலுடன் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications