73வது பிறந்த நாளை கொண்டாடினார் தலாய் லாமா
டெல்லி: திபெத்திய மத குரு தலாய் லாமா இன்று தனது 73வது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடினார்.
ஜெட்சன் ஜம்பெல் கவாங் லோப்சாங் யெஷே டென்ஜின் கியாட்சோ என்ற இயற்பெயரைக் கொண்டவர் தலாய் லாமா. 1935ம் ஆண்டு, ஜூலை மாதம் 6ம் தேதி பிறந்தவரான தலாய் லாமா, 1950ம் ஆண்டு திபெத்திய புத்த மதத்தின் 14வது குருவாக (தலாய் லாமா) பொறுப்பேற்றார்.
திபெத்தின் குயிங்காய் மாகாணத்தில் உள்ள டக்ட்செர் என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு 5வது பிள்ளையாக பிறந்தவர் தலாய் லாமா. இவரது பெற்றோருக்கு மொத்தம் 16 குழந்தைகள்.
இவர் பிறந்த 2வது வருடத்தில் 13வது தலாய் லாமாவின் மறு பிறவியாக அறிவிக்கப்பட்டார். 1950ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, 15வயதாக இருந்தபோது, 14வது தலாய் லாமாவாக நியமிக்கப்பட்டார். திபெத்திய நிர்வாகத்தையும் அது முதல் மேற்கொள்ள ஆரம்பித்தார்.
உலகெங்கும் உள்ள திபெத்தியர்களால் தலாய் லாமா பெரிதும் மதிக்கப்படுகிறார். இந்தியாவின் தர்மசாலாவில் திபெத்திய அரசை நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். திபெத்தை சீனாவின் பிடியிலிருந்து மீட்கும் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்தி வருகிறார்.
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தலாய் லாமா, உலகின் மிகப் பிரபலமான புத்த துறவியாகவும் விளங்குகிறார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications