ஐ.மு. கூட்டணி அரசு மீது 'சார்ஜ் ஷீட்' போடும் இடதுசாரிகள்!

சிபிஐ, சிபிஎம், புரட்சிகர சோசலிஷ கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகியவை இணைந்த இடதுசாரி முன்னணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறுகள், தோல்விகளை சுட்டிக் காட்டி, பட்டியலிட்டு இந்த 'குற்றப் பத்திரிக்கை'யை தயாரித்து வருகின்றன.
இதில், அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு அளித்த உறுதிமொழிகள், அதிலிருந்து பின் வாங்கியது, செய்த குழப்பங்கள் உள்ளிட்டவை விரிவாக விளக்கப்படவுள்ளன.
இதுதவிர பண வீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததும் இந்த 'குற்றப் பத்திரிக்கை'யில் இடம் பெறவுள்ளது.
மேலும், பொது செயல் திட்டத்தை மதிக்காமல் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் குறித்தும் விளக்கப்படவுள்ளது.
இதுதவிர சமாஜ்வாடி கட்சி தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக கருதும் இடதுசாரிகள், காங்கிரஸ் - சமாஜ்வாடி இடையிலான புதிய பந்தத்தையும் இந்த 'குற்றப் பத்திரிக்கை'யில் இணைத்துள்ளனராம்.
'குற்றப் பத்திரிக்கை' தயாரிப்புடன், நாடு முழுவதும் சென்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறுகளை, குழப்பங்களை மக்களிடம் விளக்கும் வகையில் தேசிய அளவிலான பிரசாரத்திலும் இடதுசாரிகள் இறங்கியுள்ளனர்.
இடதுசாரி தலைவர்கள் நாடு முழுவதும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசவுள்ளனர். பிரமாண்டப் பேரணிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
--
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications