ஒரே விமானத்தில் பயணித்த ஆற்காடு வீராசாமி - ராமதாஸ்
திருச்சி: காடுவெட்டி குரு கைதுசெய்யப்பட்டுள்ள பதட்டமான பின்னணியில், சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும்ம் பயணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் தென்னிந்திய நாட்டுப்புற கலைவிழா, மற்றும் திருச்சி அருகில் உள்ள ஒரு தனியார் என்ஜீனியரிங் கல்லூரி துவக்க விழாவில் கலந்து கொள்ள தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சென்னையில் இருந்து திருச்சிக்கு பேரமவுண்ட் விமானம் மூலம் வந்தார்.
அதே விமானத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை வரவேற்க போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ், திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் பலர் வருகை தந்து காத்திருந்தனர்.
அதே போன்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை வரவேற்க பாமக நிர்வாகிகளும் விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இருப்பினும் அமைதியான முறையில் இரு தலைவர்களையும் அவரவர் கட்சியினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications