பத்மபூஷன் விருது பெற்றார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் அதிக காலம் தங்கியிருந்து சேவை செய்த உலகின் முதல் பெண் என்ற வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான சுனிதா, நிரந்தரமாக அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டவர். கடந்த 2006-ம் ஆண்டு விண்வெளியில் உள்ள மிதக்கும் வான்வெளி ஆராய்ச்சி மையத்துக்குப் பயணம் மேற்கொண்ட அவர் 195 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவிலேயே சுனிதா வில்லியம்சுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் நேரில் வந்து இந்த விருதைப் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே அமெரிக்காவில் வசிக்கும் சுனிதாவுக்கு, ஹூஸ்டனிலுள்ள இந்தியத் தூதரான எஸ்.எம்.கவாய் மூலம் இந்த விருது வழங்கப்பட்டது.
விருதினைப் பெற்றுக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ், நான் 195 நாட்கள் வான்வெளியில் தங்கியிருந்தேன். அவை அற்புதமான தினங்கள். வானிலிருந்து பார்த்தால் பூமி மிகமிக அழகாகத் தெரியும். எல்லைகள், மொழி வேறுபாடுகள், இன உணர்வுகள் எதுவும் இல்லாத ஒரு பூமியாக இந்த கோளத்தைப் பார்த்து பூரித்துப் போனேன். ஆனால் பூமிக்கு வந்தபின் அந்த சந்தோஷம் காணாமல் போய்விடுகிறது.
என்னைப் போன்றவர்கள் விண்வெளிக்குப் போனபிறகுதான் இந்த பரவச அனுபவத்தைப் பெற்றோம்.
ஆனால் மகாத்மா காந்தி போன்ற அரிய மகான்கள் மட்டும்தான் விண்வெளிக்குச் செல்லாமலேயே, எல்லைக்கோடுகள் இல்லாத பூமியைக் கண்டார்கள். மனிதர்கள் எப்போதும் எல்லைகளற்ற அமைதியில் திளைக்க வேண்டும் என்பது மகாத்மாவின் உயரிய நோக்கம். வாவ்... என்னவொரு பரந்த சிந்தனை. காந்தியின் தேசத்தைச் சேர்ந்த பெண் என்பதில் எனக்குப் பெருமை. பத்மபூஷன் விருது பெறுவதை பெருமையாக நினைக்கிறேன், என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications