தமிழக காங். தலைவர் கிருஷ்ணசாமி நீக்கம் - புதிய தலைவர் தங்கபாலு

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கிருஷ்ணசாமிக்கு எதிராக சமீப காலமாக எதிர்ப்புகள் வலுத்து வந்தன. குறிப்பாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
கட்சியின் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லத் தவறி விட்டதாலும், கட்சியில் முன்னேற்ற செயல்பாடுகள் இல்லாததாலும், கட்சி மேலிடமும் கிருஷ்ணசாமி மீது அதிருப்தி அடைந்தது.
இதையடுத்து தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக முயன்று வந்தார் கிருஷ்ணசாமி. இதுதொடர்பாக டெல்லி சென்று காத்திருந்து சோனியா காந்தியையும் சந்தித்தார்.
இந்த நிலையில் இன்று கிருஷ்ணசாமி நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் புதிய தலைவராக கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார்.
தங்கபாலு, கடந்த நரசிம்மராவ் அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது எம்.பி.யாக உள்ளார்.
முன்னதாக ஜி.கே.வாசன், ஞானதேசிகன் உள்ளிட்ட பலருடைய பெயர்கள் தலைவர் பதவிக்கு அடிபட்டன. வாசனோ அல்லது அவரது ஆதரவாளரான ஞானதேசிகனோதான் தலைவர் பதவிக்குவருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தங்கபாலு தலைவராகியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வரும் எந்த கோஷ்டியிலும் சேராமல் தனித்து ஒரு கோஷ்டியை நடத்தி வருபவர் தங்கபாலு. தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த அவர் சமீபத்தில்தான் மெகா டிவி என்ற தொலைக்காட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மட்டுமின்றி குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
குஜராத் காங்கிரஸ் தலைவராக எம்எல்ஏ சித்தார்த் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தாக்கூர் கவுல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம












Click it and Unblock the Notifications