உடனே மெஜாரிட்டியை நிரூபியுங்கள்-பாஜக

ஆதரவை வாபஸ் பெறுவதாக இடதுசாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் பாஜகவின் செய்தி்த் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு துளியும் தாமதிக்காமல் உடனடியாக தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை உடனடியாக கொண்டு வர மறுத்தால் ஜனாதிபதி தலையிட்டு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும்.
1999ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க பிரதமர் வாஜ்பாய்க்கு அப்போதைய ஜனாதிபதி உத்தரவிட்டார். அதே போல இப்போதும் உத்தரவிட வேண்டும்.
சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இருப்பதாக வெளியில் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதை நிரூபிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம் என்றார் ஜாவேத்கர்.
அத்வானி இல்லத்தில் அவரச கூட்டம்:
இந் நிலையில் பாஜக தலைவர் அத்வானியின் இல்லத்தில் இன்று மூத்த பாஜக தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
அதில் பேசிய தலைவர்கள், பெரும்பான்மையை நிரூபிக்காத வரை, சிறுபான்மை அரசாக உள்ள பிரதமர் மன்மோகன் சிங் அரசு, சர்வதேச ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திடக் கூடாது, முக்கிய சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
ஐசியுவில் மத்திய அரசு:
இதற்கிடையே, திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், மத்திய அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். பெரும்பான்மை பலத்தை லோக்சபாவில் நிரூபிக்க வேண்டும்.
கணக்குப்படி பார்த்தால் மத்தியில் தற்போது அரசு எதுவும் இல்லை. மத்திய அரசு தற்போது கவலைக்கிடமான நிலையில், ஐசியூவில் உள்ளது. பிற கட்சிகள் சேர்ந்து காப்பாற்ற வேண்டிய மோசமான நிலையில் அது உள்ளது.
நாட்டில் பொதுத் தேர்தல் வர வேண்டும், தற்போதைய அரசு போக வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கருத்தாகும் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications