தேவாரம் பாடிய ஆறுமுகசாமி ஓதுவாரைத் தாக்கிய தீட்சிதர்கள்!

சிவ தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என ஓதுவார் ஆறுமுகசாமி நீண்ட காலமாக போராடி வந்தார். அவருடன் பல்வேறு தமிழ் அமைப்புகளும் போராடி வந்தன.
இந்தக் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றமும் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து ஆறுமுகசாமி ஓதுவார் தலைமையில் பலரும் அங்கு பாடச்சென்றபோது ஓதுவார்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டு பாட விடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து தீட்சிதர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வந்து போட்டு தேவாரம், திருவாசகம் பாட வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அதன் பின்னர் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தீட்சிதர்கள் இறங்கி வந்தனர். அதன் பின்னர் அமைதியான முறையில், தேவாரம், திருவாசகம் பாடுவது நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்நிலையில் சிதம்பரம் கோயிலில் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஓதுவார் ஆறுமுகசாமிக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தேவாரம் பாடச்சென்றபோது அங்கு இருந்த தீட்சிதர்கள் சிலர் சேர்ந்து அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஆறுமுகச்சாமி ஓதுவார் சிகிச்சை பெற்றார்.
இதுதொடர்பாக சிதம்பரம் காவல் நிலையத்தில் தீட்சிதர்கள் தன்னை தாக்கியதாக ஓதுவார் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த புதிய பிரச்சினையால் சிதம்பரத்தில் மீண்டும் பரபரப்பு திரும்பியுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications