தூத்துக்குடி துறைமுகத்தில் 9-வது கப்பல் தளம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் 9-வது புதிய கப்பல் தளத்தை வரும் 14-ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
சென்னையில் இருந்தபடியே டெலி கான்பரன்ஸ் மூலம் இதனைத் திறந்து வைக்கிறார் முதல்வர் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அன்பரசு தெரிவித்தார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் பொது சரக்குகளை கையாளும் பணிக்காக 9-வது கப்பல் தளம் கட்டும் பணி கடந்த 2006ம் ஆண்டு நவம்பரில் துவங்கியது. சுமார் ரூ.45 கோடி செலவில் இது கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா வரும் 14ம் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது.
மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு தலைமை வகிக்கிறார். நெடுஞ்சாலை துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மத்திய உள்துறை இணைவ அமைச்சர் ராதிகா செல்வி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications