'யூ டியூபை' கலக்கும் லாலுவின் 'இந்திலீஷ்'!

ஏற்கனவே லாலு பிரசாத் தனது செயல்களாலும், சேஷ்டைகளாலும் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மத்தியில் படு பாப்புலராக உள்ளார். இந்த நிலையில், அவர் குறித்த புதிய வீடியோ படம் ஒன்று யூ டியூப் மூலம் வேகமாக பரவி வருகிறது.
லாலுவின் காமெடி கலந்த பேச்சும், அவரது ஸ்டைலும் ரொம்பவே பிரபலமானது. இந்த வீடியோவிலும் அதுதான் ஹைலைட்டான விஷயமாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் லாலு பிரசாத் யாதவ் நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது தான் எழுதிய இந்திக் கவிதை ஒன்று வழக்கம் போல இழுத்துப் பேசியவாறு வாசித்தார். அப்போது பல எம்.பிக்கள் குறுக்கிட்டு ஒன்னும் புரியலை, ஆங்கிலத்தில் சொல்லுங்க என்று கோரினர்.
அவர்களை கைகளால் அமைதிப்படுத்திய லாலு, நானே அதையும் செய்கிறேன் என்று கூறி முதலில் இந்திக் கவிதையை முழுக்க வாசித்து முடித்தார். பின்னர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயன்றார். ஆனால் முடியவில்லை. திக்கித் திணறி அவர் டிரான்ஸ்லேட் செய்ததைப் பார்த்து அவையில் அங்கம் குழுங்க சிரிப்பலை. சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும் பொங்கி வந்த சிரிப்பை கமுக்கமாக கைகளால் மறைத்துக் கொள்கிறார்.
இந்தக் காட்சிதான் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. பிப்ரவரி 26ம் தேதி இந்த வீடியோ யூடியூபில் இடம் பெற்றது. அதன் பின்னர் இதுவரை மூன்றரை லட்சம் பேர் இதைப் பார்த்து சிரித்துள்ளனராம்.
லாலு என்பதற்குப் பதில் பேசாமல் 'லாஃப்டர்' என்று பெயர் வைத்திருக்கலாம்!
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications