ரகசியத்தை வெளியில் சொல்ல முடியாது-பிரணாப்
டெல்லி: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் கெடு விதித்து அனுப்பிய கடிதத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் கராத்துக்கு கடிதத்தை அனுப்பியுள்ள முகர்ஜி நிருபர்களிடம் பேசுகையில்,
சர்வதேச அணு சக்திக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பிரகாஷ் கராத்துக்கு, விளக்கமான பதில் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால், ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த முழு விவரமும் வெளியிடப்படுவது வழக்கமில்லை.
இந்தியா மற்றும் சர்வதேச அணுசக்தி கழகத்துக்கு இடையே உள்ள ரகசியமான ஆவணம் என்பதால் அதை வெளியிட முடியாது. ஆவணத்தை முழுமையாக பார்க்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட கட்சி அல்லது தலைவர்கள் அரசில் இடம் பெற வேண்டும்.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அரசியல் நிலவரம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.
பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து உத்தரவு வந்ததும் நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசு மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்க இருந்தது. நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, அதற்கு முன்னதாகவே அவை கூட்டப்படும்.
நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேறிய பின்னரே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்திக் கழகத்துடனான ஒப்பந்தம் செய்யப்படும் என்றார் முகர்ஜி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications