எதிர்த்து வாக்கு-வைகோ: ஆதரிப்போம்-எல்ஜி

இப்போது அமெரிக்காவில் உள்ள வைகோ இது குறித்து கூறுகையில்,
மத்திய அரசை ஆதரித்து வாக்களிக்க மாட்டோம். எதிர்த்தே வாக்களிப்போம். இது தொடர்பாக கட்சியின் 4 எம்பிக்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
நாங்க ஆதரிப்போம்: எல்ஜி
ஆனால், லோக்சபாவில் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால், அரசுக்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம் என மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு தனியாக இயங்கி வரும் திருச்சி எம்.பி. எல்.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக கூட்டணி என்ன முடிவெடுக்கிறதோ, அதுவே எங்களது முடிவும்.
அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாங்கள் வாக்களிப்போம் என்றார் கணேசன்.
அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஆர்.எஸ். ஆதரவை பெற பவார் முயற்சி:
இதற்கிடையே நம்பிக்கை தீர்மானத்தை வெல்ல அரசுக்கு போதிய எம்பிக்களின் ஆதரவு திரட்டும் வேலைகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
தெலுங்கானா ராஷ்ரீய சமீதியின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கூறுகையில்,
மத்திய அரசுக்கு ஆதரவளிக்க டி.ஆர்.எஸ். தயாராக உள்ளது. ஆனால், தெலுங்கானா மாநிலம் அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் முன் வர வேண்டும்.
எங்களது கனவான புதிய தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு செயல் வடிவம் தரும் பட்சத்தில் மத்திய அரசை ஆதரிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
மாயாவதி முடிவு என்ன?:
இந் நிலையில் நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்பது குறித்து உத்தரப் பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
சரியான நேரத்தில் முடிவை அறிவிப்பேன் என்று கூறி சஸ்பெண்சை கூட்டியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications