போலீஸாரிடமிருந்து தப்பிய ரவுடி என்கெளன்டரில் சாவு
சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் இன்று அதிகாலை நடந்த போலீஸ் என்கெளன்டரில் பிரபல ரவுடி பாபா சுரேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வட சென்னையைச் சேர்ந்தவர் பாபா சுரேஷ். பிரபல ரவுடி. கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நான்கு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தவர்.
சில நாட்களுக்கு முன்பு இவரைக் கைது செய்த சுரேஷை போலீஸார் தங்களது கஸ்டடியில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென சுரேஷ் தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் இன்று அதிகாலை காசிமேடு பகுதியில் என்கெளன்டரில் சுரேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில், சுரேஷ் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது மீன்பிடி துறைமுகத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது தனது உடலில் வெடிகுண்டுகள் கட்டியிருப்பதாக மிரட்டியுள்ளார் சுரேஷ்.
அவரை சரணடைந்து விடுமாறு போலீஸார் கூறியும் கேட்கவில்லை. மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டையும் எடுத்து போலீஸார் மீது வீசியுள்ளார். அது வெடித்துச் சிதறியதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீஸார் காயமடைந்தனர். ஒரு போலீஸ் ஜீப்பும் எரிந்து சாம்பலானது.
இதையடுத்து சுரேஷை போலீஸார் சுட்டு வீழ்த்தினர். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications