இலஞ்சி குமாரர் கோவில் யானை பாகன் திடீர் சாவு
தென்காசி: புகழ்பெற்ற இலஞ்சி குமார்ர் கோயில் யானைப் பாகன் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.
தென்காசி அருகேயுள்ள இலஞ்சியை சேர்ந்தவர் பரமசிவன். இவர் ஒன்றரை ஆண்டுகளாக இலஞ்சி குமாரர் கோவிலில் குட்டி யானைகளுக்கு பாகனாக இருந்துள்ளார். அதற்கு தேவையான இலை மற்றும் தழைகளை பறித்துப் போட்டு பராமரித்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை.
குடிப்பழக்கம் இருந்ததால் பரமசிவன் கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பரமசிவன் தீணி போட்டு வளர்த்து வந்த குட்டி யானை தெய்வாணை கடந்த 2 மாதத்திற்கு முன் திடீரென இறந்துவிட்டது.
யானைகளுக்கு பாகன் சரியாக தீனி போடாததாலேயே தெய்வாணை இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்று காலை குமாரர் கோயில் அன்னதானக் கூடம் அருகே அமர்ந்து பீடிக் குடித்து கொண்டிருந்த பரமசிவன் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் யானை இறந்த 2 மாதத்தில் அதற்கு தீனி போட்டு வந்த பாகன் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications